கட்சியிலிருந்து விலக்கப்பட்டவர்கள் அல்லது விலகி சென்றவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கான கதவு மீண்டும் கட்சியில் திறக்கப்பட்டுள்ளது. இவர் தான் வர வேண்டும் அல்லது அவர் தான் வர வேண்டுமென யாரையும் தனிப்பட்டு அழைக்கவில்லை. அனைவருக்கும் ஒருமுகமாகவே அழைக்கப்பட்டுள்ளதாக மலையக மக்கள் முன்னணி தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே.ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்……
மலையக மக்கள் முன்னணியின் உயர்மட்ட குழுவோடு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டு கட்சியிலிருந்து விலகியவர்கள் அல்லது விலக்கப்பட்டவர்கள் அனைவரையுமே அழைத்துள்ளோம். மாறாக அனுஷா சந்திரசேகரனுக்கோ அல்லது அரவிந்குமாருக்கு மட்டும் அழைப்பு விடுக்கவில்லை அடிமட்ட தொண்டன் வரையில் அனைவருக்குமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கட்சியை மேலும் வலுபடுத்தும் முறையிலேயே இத்தீர்மானத்தை எடுத்துள்ளோம்.எனவே யாராக இருந்தாலும் அதேபோல புதிதாக இணைந்து கொள்பவர்களும் இணைந்து கொள்ள முடியும் என வே.ராதாகிருஸ்ணன் குறிப்பிட்டார்.
நீலமேகம் பிரசாந்த்