டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற வந்த பொகவந்தலாவலையில் தனிமைப்படுத்தப்பட்ட தோட்டங்களைச் சேர்ந்த மக்கள் திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.
பொலிஸாரின் அனுமதியுடன் விடியக் காலையிலேயே சிகிச்சை பெற வந்தாக நோயாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் இரண்டு வாரங்களின் பின்னர் சிகிச்சை பெற வருமாறு வைத்தியர்களால் அறிவிக்கப்பட்டதாக அவர்கள் கூறுகின்றனர்.
தற்போது மருந்துகள் இன்றி திரும்பி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக நோயாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளரிடம் வினவியதற்கு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள நோயாளர்கள் எவ்வாறு சிகிச்சை பெற வந்தார்கள் என்பதில் சிக்கல் உள்ளதாக கூறினார்.