கொவிட்-19 தொற்று ஏற்படவில்லை என்பது உறுதியாகியுள்ள தொழிற்சங்கத் தலைவர்களை, தனிமைப்படுத்தலில் இருந்த விடுவித்தால் மாத்திரமே கல்வி அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
42 அதிபர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் ஒன்றிணைந்து மேற்கொண்டுள்ள இணையவழி கற்பித்தல் புறக்கணிப்பு தொழிற்சங்க நடவடிக்கை இன்று நான்காவது நாளாகவும் தொடர்கின்றது.
போராட்டத்தில் ஈடுபட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள், கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டதன் பின்னர், தனிமைப்படுத்தப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.