தனிஷ் அலியை எதிர்வரும் ஆகஸ்ட் 15ம் திகதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவர் இன்று திங்கட்கிழமை காலை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோதே இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தேசிய தொலைக்காட்சி அலுவலகத்திற்குள் பிரவேசித்து வன்முறையில் ஈடுபட்டமை மற்றும் அதன் ஒளிபரப்புக்கு இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்காக கைது செய்யப்பட்ட இவர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இது தொடர்பான வழக்கு கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க முன்னிலையில் இன்று காலை 9.45 மணியளவில் ஆரம்பமானது.