உயர் தர மாணவர் ஒருவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு உயிரிழந்துள்ளதாக கம்பளை எத்கால காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மறைத்து வைக்கப்பட்டிருந்த தந்தைக்கு சொந்தமான துப்பாக்கியை கண்டுபிடித்து தனது அறையில் நாற்காலியில் அமர்ந்து தன்னைத்தானே சுட்டுக் கொண்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.குறித்த மாணவனுடன் பேசுவதற்காக அவரது அண்ணன் அறைக் கதவைத் திறந்தபோது, சம்பவத்தைக் கண்டு காவல்துறையினருக்கு தகவல் கூறியுள்ளார்.
உயிரிழந்த மாணவன், சாதாரண தர பரீட்சையில் 08 A சித்திகளையும் B சித்தியையும் பெற்று சித்தியடைந்துள்ளார்.இதேவேளை, ஒரு வருடம் முன்னதாகவே உயர்தரத்துக்குத் தயாராகிவிட்டதால், தேர்வெழுத முடியாமல் போய்விடுமோ என்ற பயத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
அத்துடன், அந்த மாணவன் வீடியோ கேம்களுக்கு அடிமையாகியிருக்கலாம் என்றும் தேர்வை நினைத்து மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.