தபால் மா அதிபரை மிளகாய் பொடியால் தாக்கிய நபரால் பரபரப்பு

0
106

சந்தேகநபரின் முயற்சி தவிர்க்கப்பட்டதால் முகத்தை மூடியவாறு தபால் நிலையத்திற்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.மாத்தறை – கொட்வில – மெதகொடவில உப தபால் நிலையத்திற்கு வந்த நபர் ஒருவர் தபால் மா அதிபரை மிளகாய் பொடியால் தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த நபர் மிளகாய் பொடியை வீசி தாக்கி தபால் நிலையத்தில் பணத்தை திருட முயற்சித்துள்ளதாக கொட்வில பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும், சந்தேகநபரின் முயற்சி தவிர்க்கப்பட்டதால் முகத்தை மூடியவாறு தபால் நிலையத்திற்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.

மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேகநபர், தபால் மா அதிபரிடம் சில விடயங்களை விசாரிப்பதற்காக சென்றதாகவும், இதனால் அவரது முகத்தில் மிளகாய் பொடியை வீசி தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம் தபால் நிலையத்தில் பணத்தையும் இந்த நபர் திருட முயன்றுள்ளார்.

அப்போது, ​​தபால் நிலைய அதிபர் சந்தேக நபருடன் போராடி பணத்தை கொள்ளையடிக்க தவறியதாகவும், அப்போது தபால் நிலையத்தில் 60,000 ரூபாய் பணம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், சந்தேக நபர் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ள நிலையில், அவரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், மிளகாய்ப் பொடி தாக்குதலால் வெலிகம – உடுகாவ பிரதேசத்தை சேர்ந்த தபால் மா அதிபர் சிகிச்சைக்காக மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here