தமிழக மீனவர்கள் 12 பேர் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது!

0
113

 

தமிழ் நாட்டு காரைக்கால் பகுதியை சேர்ந்த 12 மீனர்வகள், யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்புக்கு அருகில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீன்பிடியில் ஈடுபட்ட போதே இவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாக காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் இருந்து படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

12 மீனவர்களும் ஊர்காவற்துறை நீதவானில் இல்லத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு ஒக்ரோபர் 1 ஆம் திகதி வரை விளக்கமறியளில் வைக்கப்பட்டுள்ளனர்.

காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துவரப்பட்டு விசாரணைகள் நடத்தப்படடு, அதன் பின்னர் கடற்தொழில் நீரியல் வளங்கள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், இவர்கள் 12 பேரும் ஊர்காவற்றுறை நீதவான் இல்லத்தில் முன்னிலைப்படுத்தப்படனர்.

கைப்பற்றப்பட்ட மீன்பிடி படகு, நீதவானின் உத்தரவுக்கு ஏற்ப காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here