தமிழக முதலமைச்சர் வீட்டிற்கு வெடி குண்டு மிரட்டல்!

0
66

சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு மற்றும் ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், அதிகாலையில் முதலமைச்சரின் வீட்டிற்கு சென்ற அதிகாரிகள் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ளது. இந்நிலையில் அதிகாலை பொலிஸ் பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறைக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

குறித்த மின்னஞ்சலில் முதல் அமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து முதலமைச்சரின் வீட்டிற்கு விரைந்த பொலிஸார் சோதனை நடத்தினர்.

தொடர்ந்து, ஆளுநர் மாளிகை, நடிகை த்ரிஷா வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. அந்த இடங்களிலும் பொலிஸார் சோதனை செய்துள்ளனர்.

இந்த மின்னச்சல் எதற்காக வந்தது? யார் அனுப்பினார்கள்? என்பது இதுவரை தெரியவில்லை.

அண்மைய காலங்களில் அரசியல் பிரபலங்களின் வீடுகளுக்கும் அவர்களின் அலுவலகங்களுக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வருவது தொடர்கதையாகியுள்ளது.

இந்நிலையில், சைபர் குற்றம் பொலிஸார் அந்த அஞ்சல் முகவரியைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். மேலும் இந்தச் சம்பவம் குறித்து தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here