தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு இ.தொ.கா நன்றி தெரிவிப்பு!

0
165

தமிழகத்தில் TENTEA நிறுவனத்தின் கீழ் பணிப்புரியும் தொழிலாளர்களுக்கு அரச நிதி ஒதுக்கீட்டீல் 677 வீடுகள் அமைத்து தருவதாக தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் TENTEA நிறுவனத்தின் கீழ் பணிப்புரியும், இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு புலம்பெயர்ந்து சென்ற மலையக தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் குடியிருப்பு பிரச்சினகள் குறித்து இம்மாதம் 16ம் திகதி இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் அவர்களால் முதலமைச்சர் அவர்களுடைய நேரடி கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இவ்விடயம் குறித்து முழுமையாக ஆராய்ந்து உரிய தீர்வு வழங்குவதாக தமிழக முதல்வர் செந்தில் தொண்டமானிடம் சாதகமாக தெரிவித்திருந்த நிலையில், இன்று TENTEA நிறுவனத்தின் கீழ் பணிப்புரியும் தொழிலாளர்களுக்கு அரச நிதி ஒதுக்கீட்டீல் 677 வீடுகள் அமைத்து தருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதற்கு புலம்பெயர்ந்த மலையக மக்கள் சார்பாக இ.தொ.கா தனது நன்றிகளை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here