தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி!

0
10

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று (21)  காலை நடைப்பயிற்சி மேற்கொண்டபோது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு லேசான தலைச்சுற்றல் ஏற்ப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் அனுமதிக்கப்பட்டுள்ளார். தலைச்சுற்றல் ஏற்பட்டதற்கான காரணத்தைக் கண்டறிவதற்குத் தேவையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இன்று (21) காலை முதல்வர் மு.க. ஸ்டாலின் நடைபயிற்சி மேற்கொண்டபோது அவருக்கு சேலான தலைச்சுற்றல் ஏற்பட்டுள்ளது. எனினும், அவர் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற அதிமுக முன்னாள் எம்பி அன்வர் ராஜா, திமுகவில் இணையும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து தற்போது அவர் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைக் காண துரைமுருகன் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் சிலர் மருத்துவமனைக்கு வந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here