தமிழகத்தில் இருந்து மனிதாபிமான உதவி பொருட்கள் கையளிப்பு…

0
174

தமிழக அரசாங்கத்திடம் இருந்து இலங்கைக்கு 3.4 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான மனிதாபிமான உதவிகள் இன்று கையளிக்கப்பட்டுள்ளன.

குறித்த உதவிப் பொருட்கள் இந்திய உயர்ஸ்தானிகரினால் இலங்கை அரசாங்கத்திடம் வழங்கப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோரிடம் குறித்த உதவிப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

40,000 மெட்ரிக்டொன் அரிசி , 500 மெட்ரிக்டொன் பால்மா மற்றும் 100 மெட்ரிக்டொன்னிற்கும் அதிகமான மருந்துகள் இவ்வாறு கிடைக்கப்பெற்றுள்ளது.

குறித்த பொருட்களின் மதிப்பு 22 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெவித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here