தமிழகத்தை உலுக்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வெட்டி கொல்லப்பட்ட பல்லடம் சம்பவம்

0
163

குற்றவாளியான வெங்கடேசன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
தமிழகத்தை உலுக்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட பல்லடம் சம்பவத்தில் கைதான நபரின் கால் முறிந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கள்ளக்கிணறை சேர்ந்தவர் மோகன்ராஜ் (49). மனைவி, மகன் மற்றும் தாய் ஆகியோருடன் வசித்து வந்தார். மோகன்ராஜ் விவசாயம் மற்றும் புண்ணாக்கு விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்தார்.

நேற்று முன்தினம் மாலை அதேபகுதியை சேர்ந்த வெங்கடேஷ் மற்றும் இருவர், மோகன்ராஜின் நிலத்தில் அமர்ந்து மது அருந்தி உள்ளனர். இதனை மோகன்ராஜ் தட்டிக்கேட்கவே அவரையும், சகோதரர் செந்தில்குமார் (46), தாய் புஷ்பவதி (68), சித்தி ரத்தினாம்பாள் (59) ஆகியோரையும் 3 பேரும் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பினர்.

பல்லடம் காவல்துறையினர் 4 பேரின் சடலங்களையும் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த சம்பவத்தில் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான வெங்கடேசன் மற்றும் அவரது நண்பர் செல்லமுத்துக்கு சொந்த ஊர் திருநெல்வேலி என்பதால் தனிப்படை காவல்துறை அங்கு விரைந்தது.

குற்றவாளியான வெங்கடேசன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில் செல்லமுத்துவை காவல்துறையினர் சுற்றி வளைத்த போது அவர் தப்பியோட முயன்றிருக்கிறார்.

அப்போது கீழே விழுந்ததில் அவருக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது.

அவர் தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.குற்றவாளிகளை கைது செய்ய கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வரும் நிலையில் ஒருவர் சிக்கியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here