இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானின் திருமணம் இன்று (23) இந்தியாவில் நடைபெற்றுள்ளது.
இந்தியாவின் தமிழ்நாட்டின் திருப்பத்தூரில் உள்ள ஒரு பெரிய விழா மண்டபம் மற்றும் கோவிலில் நடைபெற்றுள்ளது.
இந்திய வைத்தியரான சீதா ஸ்ரீ நாச்சியார் என்பவரை ஜீவன் தொண்டமான் திருமணம் செய்துள்ளார்.
அவர் தமிழகத்தின் முன்னாள் துணை சபாநாயகர் வி.பி. துரைசாமியின் மகள் ஆவார்.
முன்னாள் ஜனாதிபதிகள் ரணில் விக்ரமசிங்கே மற்றும் மகிந்த ராஜபக்ச உட்பட இலங்கை அரசியல்வாதிகள் பலர் திருமண விழாவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காக 20 ஆம் திகதி மனைவியுடன் இந்தியாவின் தமிழ்நாட்டுக்குச் சென்றிருந்தார்.




