தம்பதிகள் ஒன்றாக தூங்க,முத்தமிட, கட்டியணைக்கவும் அனுமதியில்லை

0
181

சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் முத்தமிட, கட்டியணைக்க தடை உள்ளிட்ட ரூல்ஸ்களை சீனா ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் தற்போது முடிவுக்கு வந்துள்ள நிலையில் பாதிப்பு ஆரம்பித்த சீனாவில், தற்போது மீண்டும் பிரச்னை ஏற்படத் தொடங்கியுள்ளது. சீனாவின் ஷாங்காய் நகரில் விறுவிறுவென பரவும் கொரோனா மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஷாங்காய் நகரில் 2.6 கோடி மக்கள் வசிக்கின்றனர். இங்கு கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்வை சநத்தித்து வருகிறது. இதையடுத்து நகரின் பல்வேறு பகுதிகளில் அதிகாரிகள் முடக்கத்தை அறிவித்துள்ளனர்.

ஷாங்காய் நகரைத் தாண்டி மற்ற பகுதிகளுக்கும் கொரோனா பரவினால், இன்னும் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என்பதால், சீனா இந்த விவகாரத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியாக புதிய கட்டுப்பாடுகளை ஷாங்காய் நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது.

பொது மக்கள் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்று வீதிதோறும் சுகாதார பணியாளர்கள் அறிவிப்பு வெளியிட்டு வருகின்றனர். ‘உங்கள் ஆசை, சுதந்திரத்தை கொஞ்ச நாட்களுக்கு கட்டுப்படுத்தி வையுங்கள். ஜன்னலை திறந்து பாட்டுப் பாட வேண்டாம். இதனால் வைரஸ் பரவும் அபாயம் உள்ளது. இன்று முதல் தம்பதிகள் ஒன்றாக தூங்க வேண்டாம். தனியாக தூங்கவும். முத்தமிடவும், கட்டியணைக்கவும் அனுமதியில்லை. தனித்தனியே சாப்பிட்டுக் கொள்ளவும். உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி’ என்று அவர்கள் எச்சரிக்கின்றனர்.

மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் ட்ரோன்கள் மூலமாக நேரடியாக வீடுகளுக்கே சப்ளை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here