புலமைப்பரிசில் பரீட்சை நாளை (09) நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 2,723 பரீட்சை மத்திய நிலையங்களில் 2,94,089 மாணவர்கள் தோற்றவுள்ளதுடன் இவர்களில் 2,20,366 பேர் சிங்கள மொழியிலும், 73,723 பேர் தமிழ் மொழியிலும் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.
புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளை நடத்துவதற்கான காலம் ஓகஸ்ட் 05ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளதுடன், பரீட்சை நிறைவடையும் வரை அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் பரீட்சை தொடர்பான விளம்பரங்களை வெளியிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் மன ஒருமைப்பாட்டுடன் பரீட்சையை எதிர்கொள்ளும் வகையில், பரீட்சை ஆரம்பிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே பரீட்சை நிலையங்களுக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முதலில் இரண்டாம் வினாத்தாள் காலை 9.30 மணி முதல் 10.45 மணி வரை நடைபெறும். சிறிய இடைவேளைக்குப் பின்னர், முதலாவது வினாத்தாள் காலை 11.15 மணி முதல் நண்பகல் 12.15 மணி வரை நடைபெறும்.
அத்துடன், கையடக்கத் தொலைபேசிகள், நுண்ணறிவுக் கடிகாரங்கள், குறிப்புகள் உள்ளிட்ட எந்தவொரு இலத்திரனியல் சாதனங்களையும் பரீட்சை மண்டபத்திற்குள் கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.




