தரம் ஒன்றுக்கு புதிய மாணவர்களை வரவேற்கும் வைபவம்

0
235

2019 ஆம் கல்வி ஆண்டுக்காக தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைத்து கொள்ளும் நிகழ்வு கல்வி அமைச்சின் சுற்றுநிருபத்திற்கு அமைவாக 17.01.2019 அன்று நாடாளவீய ரீதியில் நடைபெற்றது.இந்த வகையில் அட்டன் கல்வி வலயத்தின் அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியின் 2019ஆம் ஆண்டிற்கான தரம் 1 மாணவர்களை வரவேற்கும் வைபவம் 17.01.2019 அன்று பாடசாலை அதிபர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

அட்டன் கல்வி வலயத்தின் ஆரம்ப பிரிவிற்கான உதவி கல்வி பணிப்பாளர், அதிபர், பிரதி அதிபர், சீடா வள நிலையத்தின் இணைப்பாளர், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து நிகழ்வை சிறப்பித்தனர்.

தரம் ஒன்றுக்கான இணைந்து கொள்ள வந்த மாணவர்களை தரம் இரண்டில் கல்வி கற்கும் மாணவர்களால் வெற்றிலை கொடுத்து வரவேற்றனர்.

அத்துடன் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் பாடசாலை ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றன.

DSC01811 DSC01854

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here