பணயக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே மறைமுக பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன தற்காலிக போர் நிறுத்தம் நிரந்தர அமைதிக்கு வழிவகுக்க வேண்டும்
இஸ்ரேல் – ஹமாஸில் ஏற்பட்டுள்ள போர் நிறுத்தம் சிறந்த முன்னேற்றமாகும். இந்த தற்காலிக போர் நிறுத்தம் நிரந்தர அமைதிக்கு வழிவகுக்க வேண்டும்.” என்று அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்தார்.
“ஹமாஸ் அமைப்பு பிடித்து வைத்துள்ள அனைத்து பணயக் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். பொதுமக்களை பாதுகாப்பதற்கும், நிலையான அமைதிக்கும் போர் நிறுத்தம் அவசியம். இதற்கான அழைப்பை நாம் விடுக்கின்றோம்.” எனவும் பிரதமர் கூறினார்.
இந்நிலையில், பணயக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே மறைமுக பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன.
இந்த பேச்சுவார்த்தையின் பலனாக, 4 நாள் தற்காலிக போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அறிவித்தது.
மேலும் நான்கு நாள் போர் நிறுத்தத்தில் ஹமாஸ் பிடித்து வைத்திருக்கும் பிணைக்கைதிகளில் 50 பேர் விடுதலை செய்ய வேண்டும். அதேவேளையில் இஸ்ரேல் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 150 பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என இருதரப்புக்கும் இடையில் ஒப்பந்தம் கையெழுத்தாக நேற்று முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.