தலவாகலை லிந்துளை நகரசபையின் தவிசாளருக்கு எதிராக ஆர்பாட்டம்

0
227

தலவாகலை லிந்துளை நகரசபையின் தவிசாளர் அசோக்க சேபலாவிற்கு எதிராக 24.08.2018. வெள்ளிகழமை பிற்பகல் தலவாகலை லிந்துளை நகரசபையின் உத்தியோகத்தர்களும் நகரசபையில் பணிபுரியூம் பணியாளர்ககும் இந்த மாதத்திற்கான வேதனம் வழங்கபடாமைக்கு எதிராக ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்இந்த ஆர்பாட்டத்தின் போது தலவாகலை லிந்துளை நகரசபையின் உத்தியோகத்தர்களும் பணியாளர்களும் இனைந்து முன்னெடுத்ததாக தெரிவிக்கபடுகிறது. இந்த ஆர்பாட்டத்தின் தலவாகலை லிந்துளை நகரசபையில் பணிபுரியும் தொழிலாளர்கள் தலவாகலை லிந்துளை நகரசபையின் தவிசாளரின் காரியாலத்திற்கு சென்று கூச்சலிட்டதாகவும் தெரிவிக்கபடுகிறது

25ம் திகதி தொடக்கம் 27ம் திகதி வரை விடுமுறை காணபடுகின்றமையால் இன்றைய தினமே எங்களுக்கு உரிய வேதனம் வழங்கபட வேண்டுமென கோரிக்கையை முன்வைத்த பணியாளர்களின் கோறிக்கைக்கு அமைய தலவாகலை லிந்துளை நகரசபையின் தவிசாளர் அசோக்க சேபாலவிடம் கேட்டபோது தலவாகலை லிந்துளை நகரசபைக்கு இதுவரைகாலமும் செயலாளர் ஒருவர் நியமிக்கபடவில்லை ஆகையால்தான் இவர்களுக்கு வழங்கபடவேண்டிய வேதனத்திற்கான வவூச்சரில் கையொப்பம் இடபட வேண்டும். குறித்த வவூச்சரில் கையொப்பம் இடுவதற்காக நுவரெலியா மாவட்ட செயலாளரின் காரியாலயத்திற்கு எமது உத்தியோகத்தர் ஒருவர் அனுப்பபட்டுள்ளார் அவர் வந்தவுடன் இவர்களுக்கான வேதனம் வழங்கபடுமென தெரிவித்தார்.

தலவாகலை லிந்துளை நகரசபைக்கு செயலாளர் ஒருவர் நியமிக்கபடாமை குறித்தும் தலவாகலை லிந்துளை நகரசபையில் தொழில் புரியும் பணியாளர்களுக்கு எவ்வாறு வேதனம் வழங்குவது என மத்திய மாகாண உள்ளுராட்ச்சி சபை ஆளுனரிடம்  தொலைபேசிமூலம் தொடர்பு கொண்டு வினவிய போது தலவாகலை லிந்துளை நகரசபையின் தவிசாளருக்கும் மத்திய மாகாண உள்ளுராட்ச்சி மன்ற ஆளுனருமான மெனக்கஹேரத் இருவருக்கும் மிடையில் வாக்குவாதம் இடம் பெற்றமை குறிப்பிடதக்கது.

 

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here