தலவாக்கலை லோகி தோட்ட பிள்ளையார் கோயிலுக்கு அருகாமையில் இருந்த 200 வருடம் பழமைவாய்ந்த ஆலமரத்தை கடந்த இருவாரங்களுக்கு முன் வெட்டப்படும்போது மரகிளையொன்று முறிந்து விழுந்ததில் குறித்த பிரதேசத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் உயிரிழந்தார் இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இச்சம்பவத்தையடுத்து இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் கடந்த வாரம் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டதுடன் உடனடியாக இந்த சம்பவதுடன் தொடர்புடைய அனைவரையும் சட்டத்திற்கு முன் நிறுத்துமாறும் ஆலய மரத்தை வெட்டுவதை உடனடியாக நிறுத்துமாறும் இராஜாங்க அமைச்சர் பணிப்புரைவிடுத்திருந்தார்.
அத்தோடு இச்சம்பவத்தின் விரிவானவிசாரனையினை ஒரு மாதத்திற்குள் வழங்குமாறு பணிப்புரை விடுத்திருந்தார்.
மேலும் சம்வத்தையடுத்து அம்மரத்தை வெட்டும் பணி இடைநிறுத்தப்பட்டிருந்தது.
நேற்றைய தினம் மீன்டும் மரத்தை வெட்டும் பணி ஆரம்பிக்கபட்டுவருகின்றது இவ்விடயம் தொடர்பாக இராஜாங்க அமைச்சர் இன்றைய தினம் பிரதமர் அலுவலக கவனத்திற்கு கொண்டுச்சென்றுள்ளார்.
அத்தோடு இன்றைய தினம் இச்சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தலவாக்கலை வர்த்தகர்கள், ஸ்ரீ கதிரேஷன் ஆலய பரிபாலன சபை மற்றும் தலவாக்கலை வாழ் அனைத்து இன மக்களும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
க.கிஷாந்தன்