தலவாக்கலை தேயிலை தொழிற்சாலைக்கு அருகாமையில் உள்ள காட்டுப்பகுதியில் தீ பரவல்!!

0
205

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை தேயிலை தொழிற்சாலைக்கு அருகாமையில் உள்ள காட்டுப்பகுதியில் 17.01.2019 அன்று காலை 10.30 மணியளவில் ஏற்பட்ட தீயினால் 2 ஏக்கரிற்கு மேற்பட்ட பகுதி எரிந்து நாசமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.தற்போது இப்பிரதேசங்களில் நிலவி வரும் கடும் வெயில் மற்றும் கடும் காற்று வீசுவதனால் தீயினைக் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் தலவாக்கலை பொலிஸாரும், தலவாக்கலை விசேட அதிரடி படையினர் மற்றும் இராணுவத்தினர், பொது மக்களும் கடும் முயற்சிக்கு மத்தியில் தீயை அணைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது பல பிரதேசங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில் நீர்ப்போசண வனப்பிரதேசங்களுக்கு தீ வைப்பதனால் மேலும் நீர்த்தட்டுப்பாடு உக்கிர நிலையை அடைய வாய்ப்பிருப்பதாகவும், ஆகவே இத்தீ வைப்பவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டுமென பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

DSC01894 DSC01898

 

 

க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here