தலவாக்கலை நாவலப்பிட்டி பிரதான வீதியில் இடம்பெற்ற பஸ் விபத்து; ஐந்துபேர் கடும் காயங்களுடன் நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றம்!

0
191

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை நாவலப்பிட்டி பிரதான வீதியில் 26.03.2018 அன்று மாலை 5 மணியளவில் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் காயம்பட்ட 20 பேர் கொட்டகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

DSC07010DSC06996

அனுமதிக்கப்பட்டவர்களில் கடும் காயங்களுக்குள்ளான 5 பேர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாற்றப்பட்டவர்களில் 3 பெண்களும், 2 ஆண்களும் அடங்குகின்றனர்.

நாவலப்பிட்டி பகுதியிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு தலவாக்கலை பகுதியை நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்று பத்தனை மவுண்ட்வேர்ணன் பகுதியில் மண்மேடில் மோதி இவ்வாறு விபத்துக்குள்ளாகியது.

பிரதான வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியதினால் நாவலப்பிட்டி தலவாக்கலை பிரதான வீதியின் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

பஸ்ஸின் வேகத்தை கட்டுபடுத்த முடியாமல் போனதே இவ்விபத்துக்கான காரணம் என தெரிவிக்கும் திம்புள்ள பத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here