தலவாக்கலை ஸ்ரீ கதிரேசன் தேவஸ்த்தான தைபூச தேர் திருவிழா மிக சிறப்பாக இடம்பெற்றது.

0
178

தலவாக்கலை ஸ்ரீ கதிரேசன் தேவஸ்த்தான வருடாந்த தைபூச தேர்த்திருவிழா இன்று (18) திகதி மிக சிறப்பாக நடைபெற்றது. தைபூச தேர் திருவிழா விநாயகர் வழிபாடு,யாக பூஜை, தம்ப பூஜை,அகியன இடம்பெற்ற வள்ளி தெய்வனை சமேத முருகப்பெருமானுக்கு விசேட வசந்த மண்டப பூஜை இடம்பெற்று அதனை பக்தர்களுக்கு அருள்பாலிப்பதற்காக இன்று மாலை 5.30 மணியளவில் உள் வீதி வலம் வந்து அதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட முத்தேரில் விநாயகர், ஆதிபராசக்தி, வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் ஆகிய தெய்வங்களின் முத்தேர் பவனி மேளதாள வாத்தியங்கள் இசை முழங்க சிறப்பாக இடம்பெற்றன.

சுகாதார வழிமுறைகளுக்கமைய இடம்பெற்ற இந்த தேர் பவனியில் கலந்து கொண்டவர்களுக்கு தலவாக்கலை இந்து இளைஞர் மன்றம் முகக்கவசங்களை வழங்கி பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிப்பு வழிகாட்டினர். இதே நேரம் சுகாதார பாதுகாப்பு கருதி இம்முறை வீதிகளில் தேர்பவனிக்கு பூசைகள் இடம்பெறவில்லை. அனைத்து பூசைகளும் ஆலயத்தில் இடம்பெற்றுவருகின்றன.

குறித்த தேர் பவனி ஆலயத்திலிருந்து புறப்பட்டு தலவாக்கலை தேயிலை தொழிற்சாலை வரை சென்று வட்டகொட வீதியில் பயணித்து அதனை தொடர்ந்து நுவரெலியா தலவாக்கலை வீதியில் லோகி சந்தியில் உள்ள வழிப்பிள்ளையார் ஆலயம் வரை சென்று மீண்டும் ஆலயத்தினை வந்தடைய உள்ளன. நாளை பால்குட பவனி இடம்பெறவுள்ளதாக ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்தனர்.

பூஜை வழிபாடுகளை ஆறுமுக ரவிந்திர குருக்கள் தலைமையில் நடைபெற்ற பூஜைவழிபாடுகளில் ஆலய பிரதம குரு பிரசாந்த சர்மா மற்றும் சிவாச்சாரியார்கள், குருக்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பகதர்கள் கலந்து கொண்டனர்.

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here