தலவாக்கலையில் சிறுமி கடத்தல் விவகாரம் – சந்தேக நபர்கள் 8 பேருக்கு பிணை!!

0
129

தலவாக்கலையில் சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட தலவாக்கலை – லிந்துலை நகரசபையின் தவிசாளர் அசோக்க சேபால உட்பட 8 பேரும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, ஆளுக்கு தலா 10 லட்சம் ரூபா படி இரண்டு சரீர பிணைகளில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

தலவாக்கலையில் 5 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு 18.06.2018 அன்று நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, அவர்களுக்கு பிணை வழங்கிய நீதவான், வெளிநாடு செல்லவும் தடை விதித்தார்.

அத்துடன் இந்த வழக்கு தொடர்பான விசாரணையை அடுத்த மாதம் 20 ஆம் திகதி வரையில் ஒத்தி வைத்தார். கடந்த 4 ஆம் திகதி சிறுமி கடத்தல் விவகாரம் தொடர்பில் தலவாக்கலை லிந்துலை நகர சபையின் தலைவர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மறுநாள் குழந்தையின் தாய் உள்ளிட்ட மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

டி. சந்ரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here