தலவாக்கலை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட கிறேட்வெஸ்டன் தோட்ட பிரிவுகளான மலைத்தோட்டம் லூசா கல்கந்தவத்தை ஸ்கல்பா ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் 24.10.2018 புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில்
ஈடுப்பட்டனர்.
1000 ரூபா சம்பள உயர்வை வழங்குமாறு வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டமானது கிறேட்வெஸ்டன் தேயிலை தொழிற்சாலைக்கு அருகாமையில் ஆரம்பிக்கப்பட்டு ஊர்வலமாக கறுப்பு கொடிகளையும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்திய வண்ணமும் கோஷங்களை எழுப்பியவாறும் தலவாக்கலை கிறேட்வெஸ்டன் பிரதான வீதி
வழியாக தலவாக்கலை நகருக்கு வந்து நகர சுற்று வட்டத்தில் நின்றவாறு சில மணி நேரம் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 300 க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
தலவாக்கலை பி.கேதீஸ்