கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் 47 வயதுடைய நபரால் 17 வயது சிறுமி ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இச்சம்பவமானது தலவாக்கலை – ஹொலிரூட் பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது. . குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி புதன்கிழமை (28) தலவாக்கலை காவல் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து சம்பந்தப்பட்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நேற்று நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
தனது சொந்த மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தையையே பொலிஸார் கைது செய்துள்ளனர். இதனையடுத்து நீதி மன்றில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து குறித்த நரை் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரலிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
சுஜீவன்