மலையகம் நிலை மாற்றத்தை நோக்கி என்ற நூல் அறிமுக விழா தலவாக்கலை கதிரேசன் ஆலய மண்டபத்தில் அடையாளம் சமூக அமைப்பின் ஏற்பாட்டில் நேற்று 18 காலை 11 மணியளவில் நடைபெற்றது.
மலையகம் 200 ஐ முன்னிட்டு சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் பெ. முத்துலிங்கம் அவர்களால் எழுதப்பட்ட மலையகம் நிலைமாற்றத்தினை நோக்கி என்ற நூல் அறிமுக விழா அடையாள அமைப்பின் பொதுச் செயலாளர் ஜெகநாதன் நிதர்சன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
நூல் ஆய்;வுரையினை சட்டத்தரணி நேரு கருணாகரன்,நூல் பற்றிய கருத்துரைகளை ஹட்டன் கல்வி வலயத்தின் உதவிக்கல்விப்பணிப்பாளர் திருமதி சந்திரலேகா,அதிபர் பொன்பிரபாகரன், ஆகியோரும் நூலின் வெளியீட்டு உரையினை எழுத்தாளர் மு.சிவலிங்கம்,அவர்களும் தலைமை உரையினை பேரதானை பல்கழகத்தின் விரியுரையாளர்.ரா.ரமேஸ் வழங்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் பேராசிரியர் எஸ் சந்திரபோஸ் பேராதனை பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர். எஸ் ரமேஷே; எழுத்தாளர் மு சிவலிங்கம் ஹட்டன் கல்வி வலயத்தின் உதவிக்கல்விப்பணிப்பாளர் திருமதி சந்திரலேகா,அதிபர் பொன் பிரபா, உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
அத்தோடு ஆலயம் நுழைவாயில் இருந்து பாரம்பரிய தப்பு இசையுடன் நூல் எடுத்து வரப்பட்டதுன் இதில் கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இதன் போது எழுத்தாளர் பெ.முத்துலிங்கம் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டன.
மலைவாஞ்ஞன்