இன்று காலை தலவாக்கலை நகரிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் இரண்டாவது மாடியிலிருந்து நபர் ஒருவர் தவறி விழுந்ததில் தலையில் பலத்த காயங் களுடன் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருந்த நிலையில் தற்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிழந்துள்ளார்.
மூன்று மாடி கட்டிடத்தின் இரண்டாவது மாடியிலிருந்து தவறி விழுந்ததில் பூண்டுலோயா கயப்புக்கலை பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய போஹாதெனியாகே அபேரட்ண என்பவரே உயிரிழந்தார் என தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இறந்தவரின் சடலம் லிந்துலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இவர் தொடர்பான மேலதிக விசாரணையை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரித்தனர்.
குறித்த வர்த்தக நிலையத்தில் இரண்டாவது மாடியில் பாதுகாப்பு வேலி அமைக்கப்படாமையால் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.