கொழும்பு-வெள்ளவத்தை கடலில் இன்று திங்கட்கிழமை காலை தலையில்லா சடலமொன்று கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆண்ணொருவரின் சடலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளதுடன், குறித்த சடலம் தலை இல்லாது முழுமையாக உருகுலைந்த நிலையில் காணப்படுவதாகவும், இதனால் குறித்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.



