தாய் மற்றும் பிள்ளைகள் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்..! 3 வயது சிறுவன் பலி

0
181

மாத்தளை, உக்குவளை, லேலி அம்ப பிரதேசத்தில் தாயும் பிள்ளைகள் மூவரும் கூரிய ஆயுதத்தால் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில், 3 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக மாத்தளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று (14) காலை இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த சிறுவனின் சகோதரர்கள் இருவரும் பாடசாலை செல்லத் தயாராகிக்கொண்டிருந்த போது, அவர்களது வீட்டுக்கு வந்த நபர் ஒருவர் இவ்வாறு தாயையும் பிள்ளைகளையும் தாக்கி காயப்படுத்தியதாகவும் இதன்போது அவர்களின் தந்தை தொழிலுக்குச் சென்றிருந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் லேலிஅம்ப பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயது தாயும் 19 வயது மகளும் மற்றுமொரு சிறுவனும் பாரிய காயங்களுடன் மாத்தளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர் மனைவியைப் பிரிந்து தனியாக வாழ்பவர் என்றும் தெரியவந்துள்ளது.

தாக்குதல் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here