‘தி ஒடிசி’ பைனல் டிரெய்லர் ரிலீஸ்… ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைத்த நோலன்!

0
1
dailythanthi

உலகப் புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தி ஒடிசி’ (The Odyssey) திரைப்படத்தின் இறுதி டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கிரேக்க புராண காவியத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படம், நோலனின் திரைப்படப் பயணத்தில் புதிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.

புராணக் கதையை முதல் முறையாக கையாண்ட நோலன்
‘தி டார்க் நைட்’ முத்திரை பதித்த தொடர், ‘இன்செப்ஷன்’, ‘இன்டர்ஸ்டெல்லார்’, ‘தி பிரெஸ்டீஜ்’, ‘ஓப்பன்ஹெய்மர்’ உள்ளிட்ட உலகம் முழுவதும் பாராட்டைப் பெற்ற திரைப்படங்களை இயக்கியவர் கிறிஸ்டோபர் நோலன். சிக்கலான திரைக்கதை, பிரமாண்டமான காட்சியமைப்பு மற்றும் தொழில்நுட்ப தரம் ஆகியவற்றால் அவரது படங்கள் தனித்துவம் பெற்றவை.

கடைசியாக வெளியான ‘ஓப்பன்ஹெய்மர்’ திரைப்படம் 7 ஆஸ்கார் விருதுகளை வென்று சாதனை படைத்தது. மேலும், கணினி கிராபிக்ஸை முடிந்தவரை குறைத்து, நிஜ காட்சிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதிலும், ஐமேக்ஸ் (IMAX) கேமரா தொழில்நுட்பத்தை அதிகமாக பயன்படுத்துவதிலும் நோலன் பெயர் பெற்றவர்.

‘தி ஒடிசி’ இறுதி டிரெய்லர் வைரல்

நோலனின் 13-வது திரைப்படமான ‘தி ஒடிசி’, கிரேக்கக் கவிஞர் ஹோமரின் புகழ்பெற்ற காவியத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. அறிவியல் புனைவு படங்களை அதிகம் இயக்கிய நோலன், முதல் முறையாக புராணக் கதையை திரைப்படமாக்கியிருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.

இந்தப் படத்தில் ஹாலிவுட் நடிகர் மேட் டாமன் மற்றும் ‘ஸ்பைடர் மேன்’ படங்களின் மூலம் பிரபலமான டாம் ஹாலண்ட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க ஐமேக்ஸ் கேமராக்களில் படமாக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படம், வருகிற ஜூலை 17-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

இந்நிலையில், படத்தின் இறுதி (Final) டிரெய்லர் வெளியாகியுள்ளது. பிரமாண்டமான காட்சிகள், போர்க்கள காட்சியமைப்பு மற்றும் நோலனின் வழக்கமான திரைக்கதை பாணியை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள இந்த டிரெய்லர், இணையத்தில் வேகமாக பரவி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here