ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்துள்ள இலங்கைத் தமிழர்கள் தற்போது விடுமுறையை கழிப்பதற்காக தாயகம் நோக்கி படையெடுத்து வருகின்றனர்.இந்நிலையில் இலங்கையை சூழவுள்ள சுற்றுலாத்தளங்களில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
லிட்டில் லண்டன் என பெருமையாக சொல்லப்படும் நுவரெலியாவில் தற்போது நிலவும் மாறுபட்ட காலநிலை, உள்ளுர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்துள்ளது.
சில மணி நேரங்களில் மாறி மாறி வரும் காலநிலையினால் புதுவித உணர்வினை உணர்வதாக பல சுற்றுலா பயணிகள் தமது முகப்புத்தங்களில் பதிவிட்டுள்ளனர்.
நுவரெலியாவில் தற்போது பகல் வேளையிலும் மிகவும் குளிராகவும் இருளாகவும் இருக்கும் அதேவேளை, அடுத்த சில மணி நேரங்களில் முற்றாக மாற்றமடைந்து வெப்பமும் வெயிலுமாக காட்சியளிக்கிறது.
இந்த மாறுபட்ட காலநிலை உணர்ந்து கொள்ள பெருமளவு சுற்றுலா பயணிகள் நுவரெலியா நோக்கி படையெடுத்து வருகின்றனர்.