எரிபொருள் விநியோகத்தில் நிலவிய தடங்கள் சீராக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜயசேகர டுவிட்டர் பதவிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த நான்கு நாட்களாக மேலதிக எரிபொருள், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.
இனி நாளாந்தம் 4000 மெட்ரிக் டன் டீசல் மற்றும் 3000 மெட்ரிக் தொன் பெற்றோல் என்பன இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகிக்கப்படும்.
அதேநேரம் மேலும் 35,000 மெட்ரிக் தொன் 92 ஒக்டென் பெற்றோலைக் கொண்ட கப்பல் ஒன்றிலிருந்து தரையிறக்கும் பணிகள் நேற்றிரவு ஆரம்பிக்கப்பட்டன என்றும், அமைச்சர் கூறியுள்ளார்.