தினமும் இந்த 7 பொருளை சாப்பிட்டா ஆயுளுக்கும் உங்களுக்கு புற்றுநோய் வராதாம்…!!

0
229

புற்றுநோய் உயிரை குடிக்கும் கொடிய நோய்களில் முதலிடத்தில் உள்ளது என்று சொல்லலாம்.உடலில் உள்ள செல்களின் இயல்புக்கு மாறான வளர்ச்சியும், அதைச் சுற்றியுள்ள திசுக்களும் உறுப்புகளும் பாதிக்கப்படுவதை உணர்த்தும் அறிகுறிதான் புற்றுநோய்.

புற்றுநோய் பல உறுப்புகளில் வந்தாலும் நுரையீரல், கல்லீரல், பெருங்குடல், வயிறு மற்றும் மார்பகம் ஆகிய உறுப்புகளிலேயே பெரும்பாலும் புற்றுநோய் உண்டாகிறது.ஒவ்வோர் ஆண்டும் உலக அளவில் 1.4 கோடிப் பேருக்குப் புற்றுநோய் வருவதாக உலகச் சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரம் கூறுகிறது.

புற்றுநோய் வந்தால் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நினைத்து மூலையில் உட்கார வேண்டிய தேவை இல்லை. இதற்கு இயற்கை முறையில் பல வழிகளும் உள்ளன.நாம் உணவில் சேர்த்துக் கொள்ளும் சில வகை உணவுப் பொருட்கள் மற்றும் காய்கறிகள், பழங்கள் போன்றவை புற்றுநோய் வராமல் காக்க உதவி செய்கிறது.

இந்த வகை உணவுகளில் இயற்கையாகவே புற்றுநோயை தடுக்கும் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகின்றது.அந்தவகையில் தற்போது நமக்கு வரும் புற்றுநோயை தடுக்க எந்த வகையான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்று இங்கு பார்ப்போம்.

தக்காளியை சாண்ட்விட்ச், ஜாஸ், சாலட்டுகள் போன்றவற்றில் அதிகளவு பயன்படுத்தி வாருங்கள். இது உங்களுக்கு புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றலை தரும். ஏனனெில் இதில் லைக்கோபீன் என்ற பொருள் உள்ளது. இது புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றல் உள்ளது.பீன்ஸில் அதிகளவு நார்ச்சத்து இருப்பதால் இது குடல் புற்றுநோயை போக்கும் ஆற்றல் கொண்டுள்ளது.பீன்ஸ் புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சியை 75 சதவீதம் தடுக்கும் திறன் கொண்டது.

பிரக்கோலியில் சல்போராபேன் என்ற பொருள் உள்ளதால் இது புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றலை கொண்டுள்ளது. இதை சாலட்டுகள், சூப்கள், சாண்ட்விட்ச்கள் போன்றவற்றில் நீங்கள் சேர்த்து பயன்படுத்தி வரலாம். அதே மாதிரி பெருங்குடல் புற்றுநோயை தடுக்கவும் பிராக்கோலி உதவுகிறது.

பெர்ரிகளில் 62 சதவீதம் புற்றுநோயை குறைக்கும் ஆற்றல் காணப்படுகிறது. இது பெருங்குடல் புற்றுநோயையும் தடுக்கின்றன. எனவே பெர்ரி பழங்களை உங்கள் உணவில் சேர்த்து வாருங்கள்.தினமும் 1/2-1 டீ ஸ்பூன் அளவு பட்டை பொடியை சேர்த்து வாருங்கள். இது உங்களுக்கு புற்றுநோயை தடுக்கும் ஆற்றலை கொடுக்கும்.

மஞ்சள் நுரையீரல், மார்பக மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய்களையும் வராமல் தடுக்க உதவுகிறது. எனவே மஞ்சளை தவறாமல் உங்கள் உணவில் சேர்த்து வாருங்கள்.கேரட்டில் புற்றுநோயை தடுக்கும் ஆற்றலும் காணப்படுகிறது. எனவே கேரட்டை பச்சையாகவோ அல்லது பொரியல், வேக வைத்தோ சாப்பிட்டு வரலாம். உங்கள் உணவில் கேரட்டையும் தவறாமல் சேருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here