திரிபோசா தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

0
64

கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் திரிபோஷா தயாரிப்புக்கு தேவையான சோளம் மற்றும் சோயா அவரை என்பவற்றை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய 6000 மெட்ரிக் தொன் சோளம் மற்றும் 3000 மெட்ரிக் தொன் சோயா அவரை இறக்குமதி செய்யப்படவுள்ளது.அவற்றின் விநியோக ஒப்பந்தத்தை இரு தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவது தொடர்பிலான அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

நிதியமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe)) இதற்கான பத்திரத்தை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here