திரிபோஷா தொடர்பில் தேவையற்ற அச்சம் வேண்டாம் – நிறுவன தலைவர்

0
172

இலங்கை திரிபோஷ நிறுவனநிறுவனத்தினால் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் நிலை தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம், என அதன் தலைவர் தீப்தி குலரத்ன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் தமது தயாரிப்புகள் முறையான தரத்திற்கு அமைவாக உற்பத்தி செய்யப்படுவதாக தெரிவித்தார்.

சிறு பிள்ளைகள் மற்றும் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு வழங்கப்படும் உணவுகளில் புற்றுநோயை உண்டாக்கும் அஃப்ளாடாக்சின்கள் உள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன அண்மையில் தெரிவித்திருந்தமை தொடர்பில் சமூகத்தில் விவாதம் எழுந்துள்ளது.

இலங்கை திரிபோஷ நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்ன, சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர், தமது நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்பட்ட திரிபோஷாவில் அதிகளவிலான அஃப்ளாடோக்சின் கலந்திருந்ததாகவும், எனினும் சிறு பிள்ளைகள் மற்றும் கர்ப்பிணி தாய்மாருக்கு அவை வழங்கப்படவில்லை, என்றும் தெரிவித்தார்.

இதேவேளை, திரிபோஷாவில் பிரச்சினை இருப்பதை நானும் ஏற்றுக் கொள்கின்றேன், என சுகாதார அமைச்சர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here