எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் திருத்தம் செய்யப்படும் பஸ் கட்டணங்கள் இன்று செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட உள்ளன.
இன்று நள்ளிரவு முதல் பஸ் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு நேற்று பணிப்புரை விடுத்துள்ளார்.
தேசிய பேரூந்து கட்டண கொள்கையின் பிரகாரம் இம்மாதம் முதலாம் திகதி முதல் 22 வீதத்தால் பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், குறைந்தபட்ச கட்டணம் 40 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
போதியளவு எரிபொருள் வழங்கினால் பஸ் கட்டண திருத்தம் தொடர்பில் பிரச்சினை ஏற்படாது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.