தம்புள்ளையிலுள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் பாரிய பதற்ற நிலையமை ஏற்பட்டுள்ளது.
இரண்டு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தகராறு மோதலாக மாறியதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.நேற்று இடம்பெற்ற திருமண நிகழ்விலேயே இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவ இடத்திற்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.மேலும் வன்முறையை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட நபர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.