திருமணத்தில் நடனமாடிய யுவதி மாரடைப்பால் உயிரிழந்த பரிதாபம் – விசாரணைகள் தீவிரம்

0
138

யுவதி ஹொரண பதுவிட்ட பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் விற்பனை அதிகாரியாக கடமையாற்றி வந்தார்.
திருமண வைபவம் ஒன்றில் நடனமாடிக்கொண்டிருந்த யுவதியொருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக மொரகஹஹேன பொலிஸார் தெரியவந்துள்ளனர்.

மெகொட, உடகேவத்தை பிரதேசத்தை சேர்ந்த மஞ்சரி ஆதித்ய பெர்னாண்டோ என்ற 25 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த யுவதி ஹொரண பதுவிட்ட பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் விற்பனை அதிகாரியாக கடமையாற்றி வந்தார்.

ஹொரண கோனாபொலவில் உள்ள விழா மண்டபம் ஒன்றில் நிறுவன ஊழியர் ஒருவரின் திருமண விழாவிற்கு சென்றிருந்த வேளையிலேயே அவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

அங்குள்ள கூட்டத்தினருடன் அவர் உல்லாசமாக நடனமாடியது பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.மேலும், சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

திருமண வைபத்தில் நண்பர்களுடன் சேர்ந்து நடனமாடும் போது, ​​குறித்த யுவதி அவ்விடத்தை விட்டு வெளியேறியதாகவும், சிறிது நேரத்தின் பின்னர் அவர் சுகவீனமடைந்து மயங்கிவிழுந்ததாகவும் பொலிஸ் விசாரணைகளழலட தெரியவந்துள்ளது.மேலும், நண்பர்களால் உடனடியாக காரில் மஞ்சரியை ஏற்றி ஹொரணையில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து அவரை ஹொரண வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லுமாறு தனியார் வைத்தியசாலையின் வைத்தியர்கள் பணிப்புரை விடுத்துள்ளனர்.

மஞ்சரியை ஹொரண வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்னவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.மாரடைப்புடன் அவர் சாப்பிட்ட உணவினால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டமையினால் அவர் உயிரிழந்துள்ளதாக ஹொரண ஆதார வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி சுமேதா குணவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here