திஸ்ஸமஹாராம துப்பாக்கிச் சூடு;விபரங்களை வெளியிட்ட காவல்துறை

0
52

திஸ்ஸமஹாராம, முத்தியம்மன பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 58 வயதுடைய ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த துப்பாக்கிச் சூடு நேற்று மாலை 5 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கிதாரியால் நடத்தப்பட்டுள்ளது.

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட (12-bore வகை) துப்பாக்கியைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் உடனடியாக சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக என சந்தேகிக்கப்படுகிறது.

தனிப்பட்ட தகராறில் இந்த தாக்குதல் நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் தலை மறைவாகியுள்ள நிலையில் அவரை கைது செய்ய விசேட பொலிஸ் குழு அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here