தீடிர் என தீபற்றி எரிந்த முச்சக்கர வண்டி- டிக்கோயா பகுதியில் சம்பவம்

0
200

அட்டன் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட டிக்கோயா வனராஜா தோட்டபகுதியில் இருந்து டிக்கோயா நகரத்திற்க்கு வந்த முச்சக்கர வண்டி நிறுத்தி வைக்கபட்ட இடத்தில் தீடிர் என தீபற்றியதால் முச்கரக்கர வண்டி பகுதி அளவில் தீபற்றி
எரிந்தள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் 04.01.2019 வெள்ளிகிழமை பிற்பகல் 12.45மணி அளவில் இடம் பெற்றுள்ள தாக அட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

குறித்த முச்சக்கர வண்டி டிக்கோயா வனராஜா தோட்டபகுதியில் இருந்து டிக்கோயா நகரத்தில் நிறுத்தி வைத்துவிட்டு அதன் சாரதி வங்கி ஒன்றுக்கு சென்ற வேலையிலே முச்சக்கர வண்டி தீ பற்றி எறிந்துள்ளதாகவும் நகரத்தில்
இருந்து மக்கள் ஒன்றினைந்து தீயினை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் முச்சக்கர வண்டியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது

சம்பவம் தொடர்பில் அட்டன் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றமை
குறிப்பிடதக்கது

1

 

(பொகவந்தலாவ நிருபர் .எஸ்.சதீஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here