இம்முறை தலவாக்கலை நகரில் நடைபாதை வியாபார கடைகள் அமைப்பதாக உத்தியோகபூர்வ முடிவு எடுக்கபட்டுள்ளதாக தலவாக்கலை நகர முதல்வர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் தீபாவளி பண்டிகை தொடர்பான தலவாக்கலை ஐக்கிய வர்த்தக சங்க ஒன்று கூடல் தலவாக்கலை-லிந்துலை நகரசபையில் நேற்று நடைபெற்றது. அப்போதே இம்முடிவு எடுக்கப்பட்டதாக தலவாக்கலை நகர முதல்வர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்:-
இம்முறை வித்தியாசமான முறையில் யாருக்கும் பாரபட்சமின்றி தலவாக்கலை நகர் மத்தியில் நடைபாதை வியாபார கடைத்தொகுதிகள் வழங்க உள்ளதாகவும் ஒரே சமனான 300 கடைத்தொகுதிகள் பிரிக்கப்பட்டு அதற்காக இம்மாதம் 25ம் திகதிக்கும் 30ம் திகதிக்கும் இடையில் முன்கூட்டியே பதிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் ஒருவருக்கு ஒரு பதிவே ஏற்றுக்கொள்ளப்படுமெனவும் கடைத்தொகுதிகளின் இடங்கள் அனைத்தும் குழுக்கள் முறையிலே தீர்மானிப்பபடுமென நகர முதல்வர் கௌரவ அசோக்க சேப்பால அவர்கள் தெரிவித்தார்.