தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஹட்டன் நகரில் திடீர் பரிசோதனை

0
167

தமிழ் இந்துமக்களின் எதிர்வரும் 06ம் திகதி தீபாவளி பண்டிகையை கொண்டாட விருப்பதால் ஹட்டன் நகரில் உள்ள வர்த்தகநிலையங்கள் மற்றும் தற்காலிகமாக அமைக்கபட்ட வர்த்தக நிலையங்கள் அனைத்தும் சுகாதரா பரிசோதகர்களால் பரிசோதனைக்குட்படுத்தபட்டுள்ளது இந்த அதிரடி பரிசோதனை 03.11.2018 சனிகிழமை காலையில் இருந்து முன்னெடுக்கபட்டதாக பொது சுகாதார பரீசோதகர்கள் தெரிவித்தனர்இத்ந பரிசோதனை நடவடிக்கையில் அம்பகமுவ பொகவந்தலாவ கினிகத்தேன தலவாகலை கொத்மலை போன்ற பகுதிகளில் உள்ள பொது சுகாதார பரிசோதகர்கள் வரவழைக்கபட்டு ஹட்டன் நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் உணவகங்கள் தற்காலிகமாக அமைக்கபட்ட வர்த்தக நிலையங்கள் என்பன பரிசோதனைக்கு உட்படுத்தபட்டதாக தெரிவிக்கபடுகிறது

ஹட்டன் நகரில் மேற்கொள்ளபட்ட நடவடிக்கையின் போது பாவனைக்கு உதவாத பொருட்கள் என்பன மீட்கபட்டுள்ளதோடு அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளும் மேற்கொள்ளபட விருப்பதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

02 08 03

இதேவேலை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொருட்களை கொள்வனவு செய்யும் பொதுமக்கள் மிக அவதானமாக பொருட்களை கொள்வனவு செய்யுமாறும் பொது சுகாதார பரிசோதகர்கள் பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடதக்கது.

 

எஸ்.சதீஸ், க.கிஷாந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here