நாவலப்பிட்டி தெகிந்த வீதியில் இன்று (13) அதிகாலை பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்து சாம்பலாகியதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கரவண்டியின் உரிமையாளர் நாவலப்பிட்டி தெகிந்த பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு மீண்டும் திரும்புகையில், தெகிந்த வீதியில் திடீரென தீ ஏற்பட்டதாகவும், தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் நாவலப்பிட்டி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
முச்சக்கரவண்டியில் ஏற்பட்ட எரிபொருள் கசிவே தீ விபத்துக்கான காரணம் என நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்திருந்தமை குறிப்பிடதக்கது.