நுவரெலியா பிரதான பஸ்தரிப்பு நிலையத்திற்கு அருகில் ஐடியல் கட்டிடத்திற்கு செல்லும் வழியில் அமைக்கப்பட்டுள்ள கடைத்தொகுதியில் கடை ஒன்று (27) அதிகாலை 3 மணியலவில் திடீரென தீ பற்றி முற்றாக எறிந்து சாம்பளாகியுள்ளது.
குறித்த கடையில் பிளாஸ்டிக் உபகரனங்கள் மற்றும் பாதணிகள் விற்பனை செய்யப்பக்டு வந்ததாகவும் மின் ஒழுங்கீனம் காரணமாக தீ விபத்து சம்பவத்திருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ள நுவரெலியா பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அதேவேளையில் சடையின் உரிமையாளர் சம்பவம் தொடர்பில் சந்தேகம் வெளியிட்டுள்ளதாகவும், தனது கடை கடந்த காலத்தில் இரண்டு முறை உடைக்கப்பட்டு சேதமாக்கப்பட்ட நிலையில் தற்போது தீ பிடித்துள்ளமை தொடர்பிலேயே சந்தேகம் தெரிவித்ததாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
டி.சத்ரு.