நுவரெலியா மாவட்டத்தில் தீவிபத்து மண்சரிவு உட்பட பல்வேறு அனர்த்தங்களின் போது வீடுகளை இழந்து நிர்கதியான நிலையில் தற்காலிக கொட்டில்களில் பல வருட காலமாக பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். தங்களுக்கு வீடுகளை நிர்மானித்து தருமாறு பாதிக்கப்பட்ட மக்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் பல முறை கோரிக்கைகளை முன்வைத்த போதிலும் அவர்களுக்கு வீடுகள் நிர்மானித்து கொடுக்கப்படவில்லை.
இந்நிலையில் தற்போது ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி கோட்டபாய அவர்களின் அரசாங்கம் முதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டுத்திட்டத்தினை நிர்மானிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இதற்கமைய நுவரெலியா மாவட்டத்தில் தீ மற்றும் மண்சரிவு உள்ளிட்ட அனர்த்தங்களில் பாதிக்ப்பட்ட மக்களுக்கு பல இடங்களில் ராஜங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் நுவரெலியா மாவட்டத்தில் தற்போது வீடுகள் நிர்மானிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் அக்கரபத்தனை பெல்மோரல் தோட்டத்தில் கடந்த 2017 ஆண்டு ஜூன் 13 ம் திகதி தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட 12 குடும்பங்களுக்கு பெல்மோரல் தோட்டத்தில் ஏழு பேச்சஸ் காணியில் இரண்டு படுக்கை அறைகள், ஒரு விறாந்தை, சமையலறை,க ழிவறை, உட்பட தண்ணீர் மின்சாரம், பாதை ஆகிய அடிப்படை வசதிகளுடன் 12 வீடுகள் முழுமையாக நிர்மானிக்கப்பட்டுள்ளன.
குறித்த 12 வீடுகளை நிர்மானிப்பதற்கு 3066,973.89 நிதியினை தோட்ட வீடமைப்பு மற்றும் சமூதாய உட்கட்டமைப்பு ராஜங்க அமைச்சு செலவு செய்துள்ளது. குறித்த வீடமைப்பு திட்டம் நுவரெலியா மாவட்ட பெருந்தோட்ட அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு தீ விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிர்மானிக்க்பட்ட வீடுகள் மிக விரைவில் கையளிக்கப்படவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் உதவி செயலாளர் சச்சிதாநந்தன் தெரிவித்தார்.நேற்று வீடமைப்பு திட்டத்தின் பார்வையிட சென்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்த பொது மக்கள் கருத்து தெரிவிக்கையில்….
2017 ம் ஆண்டு ஜூன் மாதம் 13 திகதி எங்களது தோட்ட குடியிருப்பு தீ விபத்துக்குள்ளானது இதனால் நாங்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்தோம் எங்களுடைய உடைமைகள் யாவும் தீக்கிரையாகிய நிலையில் எங்களுக்கு வீடுகளை அமைத்து தருமாறு அப்போது இருந்த நல்லாட்சி அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டோம் ஆனால் அவர்கள் செய்து கொடுக்கவில்லை இந்நிலையில் கௌரவ ராஜங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானிடம் வைத்த கோரிக்கைக்கு அமைய தற்போது ஒரு அழகான ஒரு இடத்தில் தனி வீடுகள் சகல வசதிகளுடன் நிர்மானிக்கப்பட்டுள்ளன.
அதற்கு முதலில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களுக்கும் அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவிக்கும் அதே வேளை இந்த வீடுகளை மிக விரைவில் எங்களுக்கு கையளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என அவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸஸின் உப செயலாளர் சச்சிதாநந்தன் கருத்து தெரிவிக்கையில்..
பெல்மோரல் தோட்டத்தில் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட 12 குடும்பங்களுக்கு ராஜங்க அமைச்சர் கவனத்திற்கு கொண்டு வந்ததற்கு இணங்க தற்போது தனி வீட்டுத்திட்டம் நிறைவு பெற்றுள்ளது இந்த வீடுகள் அனைத்துக்கும் தண்ணீர் மின்சாரம் பாதை வசதிகள் உட்பட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
கடந்த அரசாங்கத்தில் நிர்மானிக்கப்பட்டது போன்று தண்ணி இருந்தால் பாதையில்லை பாதையிருந்தால் மின்சாரம் இல்லை என்பது போல் அல்லாது அனைத்தும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. மலையகத்தில் நிர்மானிக்கப்பட்டு வரும் வீட்டு திட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிர்மானிக்கப்பட்ட முதலாவதாக நிறைவுபெற்றுள்ள வீட்டு திட்டம் இதுவாகும் ஆகவே இந்த வீடுகளை மிக விரைவில் கௌரவ ராஜங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானி வழிகாட்டலில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரமேஸ்வரன் அவர்களின் பங்களிப்புடன் கையளிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
கே.சுந்தரலிங்கம்.