தீவிர கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வரும் ரணில்

0
5

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடுமையான மருத்துவ மேற்பார்வையின் கீழ் சிகிச்சை பெற்று வருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷன் பெல்லன தெரிவித்துள்ளார்.

ரணிலுக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டதால், அவரது இரத்த அளவுகளில் மாற்றங்கள் மற்றும் பிற மருத்துவ அறிகுறிகள் ஏற்பட்டதால் சிறை வைத்தியசாலையிலிருந்து மாற்றப்பட்டார். நீதிமன்ற அறையில் பல மணி நேரம் காத்திருந்தபோது மின்சாரம் தடைபட்டதாலும், போதுமான அளவு தண்ணீர் உட்கொள்ளாததாலும் இந்த நிலை ஏற்பட்டதாக நம்பப்படுகிறது என வைத்தியர் பெல்லன குறிப்பிட்டுள்ளார்.

“முன்னாள் ஜனாதிபதியை நான் பார்த்தேன். அவர் நீர்ச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளார், மேலும் அவரது இரத்தத்திலும் பிற அறிகுறிகளிலும் சில மாற்றங்கள் உள்ளன”

“அவரை குறைந்தது மூன்று நாட்களுக்கு கடுமையான ஓய்வில் வைத்திருக்க வேண்டும், தொடர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால், இதயப் பிரச்சினைகள், சிறுநீரகப் பிரச்சினைகள் மற்றும் பிற சிக்கல்கள் ஏற்படலாம்.”

“அவர் தற்போது விசேட வைத்திய குழுக்களால் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறார்”.

“அவர் இரண்டு முதல் மூன்று நாட்களில் குணமடைவார் என்று நாங்கள் நம்புகிறோம், ” என்று அவர் மேலும்குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here