துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2வது சுற்றில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரைபகினா, குரோஷியாவின் அண்டோனியா ருசிக் உடன் மோதினார்.
ரைபகினா முதல் செட்டை 7-5 என கைப்பற்றினார்.அண்டோனியா ருசிக் 2வது செட்டை 6-4 என வென்றார். 3வது செட்டில் அண்டோனியா ருசிக் 1-0 என முன்னிலை பெற்றிருந்தபோது ரைபகினா காயத்தால் விலகினார். இதனால் குரோஷிய வீராங்கனை காலிறுதிக்கு முன்னேறினார்.