சிறைச்சாலைக்குள் கைதிகளை அச்சுறுத்திய லொகான் ரத்வத்தவின் அனைத்துப் பதவிகளும் பறிக்கப்பட வேண்டும் என்பதுடன் துப்பாக்கியும் பறிக்கப்பட வேண்டும் என்று சிரேஸ்ட சட்டத்தரணியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நபர்களிடம் துப்பாக்கி இருப்பது என்பது பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த சம்பவங்கள் தொடர்பாக உடனடியாக அரசாங்கம் விசாரணைகளை நடத்த வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அத்துடன், லொகான் ரத்வத்த கைதுசெய்யப்பட்டு, சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் சுமந்திரன் எம்.பி மேலும் வலியுறுத்தியுள்ளர்.
இதுகுறித்து சுமந்திரன் எம்.பி. தெரிவித்துள்ள கருத்துக்கள்!