ரன்வீர் சிங், சாரா அர்ஜுன், மாதவன், அக் ஷய் கன்னா உள்பட பலர் நடித்து வெற்றிபெற்ற ‘துரந்தர்’ படத்தின் அடுத்த பாகம், ‘துரந்தர்; த ரிவெஞ்ச்’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. ஆதித்யா தார் இயக்கியுள்ள இப்படம் இன்று வெளியாகிறது.
இந்தியில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு ரிலீஸ் ஆகிறது. இப்படத்துக்காக தமிழ், தெலுங்கில் கட்டண பிரீமியர் காட்சிகள் நேற்று மாலை திரையிடப்பட இருந்தன. திரையிடலுக்கு சில மணி நேரங்களுக்கு முன் அக்காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. மொழி மாற்ற பதிப்பின் தாமதத்தால் ரத்து செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.




