‘துரந்தர் 2 தி ரிவெஞ்ச்’ படத்தை பார்த்துவிட்டு மெய்சிலிர்த்த விராட் கோலி!

0
2
dailythanthi

இந்திய சினிமா வரலாற்றில் 2 பாகங்களும் ரூ. 1,000 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த முதல் படம் என்ற சாதனையை ஏற்படுத்தியுள்ளது இந்த துரந்தர் 1 மற்றும் 2. ஆதித்யா தார் ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் வெளியான அதிரடி ஸ்பை த்ரில்லர் திரைப்படமான ‘துரந்தர் 2’ முதல் பாகத்தின் தொடர்ச்சியாக வெளிவந்தது., பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்பிற்குள் ஊடுருவி அவர்களை வேட்டையாடுவதாக இந்த காட்சிகள் சித்தரிக்கப்பட்டு இருந்தன. இந்த படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி துரந்தர் 2 படம் பார்த்துவிட்டு தனது ரிவியூவை எழுதியுள்ளார். சமூக வலைத்தளத்தில் கோலி பதிவிட்டுள்ளதாவது:

துரந்தர் 2 தி ரிவெஞ்ச் படத்தை பார்த்தேன். இந்தியாவில் இதுபோன்ற ஒரு சினிமா அனுபவத்தை நான் இதுவரை பார்த்ததே இல்லை. ட இந்த படம் அனைத்து உணர்வுகளையும் வெளிப்படுத்தியது. சுமார் 4 மணி நேரம் நான் ஒரு கணமும் கவனம் சிதறாமல் பார்த்தேன் ஆதித்யா தார் உங்கள் திறமை மற்றும் உறுதி இந்த படைப்பில் தெளிவாக தெரிகிறது. உங்களுக்கு வாழ்த்துகள். நீங்கள் ஒரு ஜீனியஸ். அனைத்து நடிகர்களும் தங்களது கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்திருந்தாலும், ரன்வீர் சிங் இந்த படத்திற்கு பிறகு நீங்கள் முற்றிலும் வேறொரு நிலையை அடைந்துள்ளீர்கள். உங்கள் நடிப்பு மிகச் சிறந்தது. உண்மையிலேயே வாவ்,” என்று பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here